ரேஷன் கார்டு கேட்டு வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த நபரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து நிவாரணம் மற்றும் தங்கள் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து கலெக்டரே நேரடியாக மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடந்தது வருகிறது. இங்கு மனுக்கள் கொடுக்க வருபவர்கள் மறைத்து வைத்து மண்ணெண்ணெய் கொண்டு வந்து உடலில் ஊற்றி தீ வைக்க முயற்சிகள் செய்ய முற்படும் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் சம்பவங்கள் நடந்ததால் கலெக்டர் அலுவலகம் செல்பவர்களின் பைகளை பரிசோதனை செய்த பின்பு தான் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பாதுகாப்புக்கும் கூடுதலாக போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம் அருகே வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ரேஷன் கார்டு கேட்டு கோட்டார் பகுதியை சேர்ந்த ஐயப்பன் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் ரேஷன் கார்டு வழங்க கேட்டு வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்ற ஐயப்பன் கையில் இருந்த பை ஒன்றில் மண்ணெண்ணெய் கேனும் இருந்துள்ளது.
இதனை பார்த்த ஊழியர்கள் கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை வாங்கி வைத்துக் கொண்டு போலீசுக்கு தகவல் கொடுத்தனர் இதனையடுத்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையின் போது கையில் இருந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது.
நான் குடும்பத்தை விட்டு பிரிந்து 6 வருட காலமாக தனிமையில் வாழ்ந்து வருகிறேன். புதிய ரேஷன் கார்டு வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 14 ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. நியாயவிலை கடையில் பொருட்கள் பெறவோ, ஓட்டுனர் உரிமம் பெறவோ முடியவில்லை. இதனால் என்னுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே என்னுடைய குடும்ப அட்டையில் மீண்டும் பெயரை சேர்த்து தர வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.






0 Comments