அமெரிக்க பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சாமியாருக்கு, தர்ம அடி கொடுத்த மக்கள், போலீசில் ஒப்படைத்தனர்.அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பெண், ஆக்ஸினாலீ, 32. ஜன., முதல், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள, நித்யானந்தா ஆசிரமம் எதிரே, ஒரு வாடகை வீட்டின் முதல் மாடியில் தங்கியுள்ளார்.
அப்பகுதியில் அவர் செல்லும்போது, கிரிவலப்பாதை பிளாட்பாரத்தில் தங்கியுள்ள, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த, சாமியார் மணிகண்டன், 42, பேச்சு கொடுத்து, ஒரு மாதமாக அவருடன் பழகி வந்துள்ளார்.

நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, ஆக்ஸினாலீ வீட்டுக்கு மணிகண்டன் சென்றார். கத்தியை காட்டி மிரட்டி, அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். கராத்தே, குங்பூ தெரிந்த ஆக்ஸினாலீ, மணிகண்டனை தாக்கி, வீட்டுக்குள் கட்டி வைத்தார்.தகவலறிந்த அக்கம் பக்கத்தினர், மணிகண்டனுக்கு தர்ம அடி கொடுத்து, திருவண்ணாமலை தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.