நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கேரள மாநிலத்திற்கு சென்று நமக்கென பிரத்யேக கட்சி தொடங்க வேண்டும் என மதபோதகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசின் ஒடுக்குமுறையை எப்படி எதிர்கொள்வது என்று இஸ்லாமியர் ஒருவர் ஜாகிர் நாயக்கின் பேஸ்புக் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு அவர், இஸ்லாமியர்கள் தங்களுக்குள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு அனைவரும் ஒன்றிணைந்து அரசியல் கட்சிகளுக்கு எதிராக போராட வேண்டும் என கூறினார்.
இந்தியாவில் 20 கோடி இஸ்லாமியர்கள் தான் இருக்கிறார்கள் என்று அதிகாரப்பூர்வ கணக்கில் சொல்லப்பட்டாலும், 25 கோடி முதல் 30 கோடி இஸ்லாமியர்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இஸ்லாமியர்கள் அனைவரும் இணைந்து இஸ்லாமியர்களுக்கு என்று பிரத்யேக கட்சி தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அந்த இஸ்லாமிய கட்சி மதவாத கொள்கை இல்லாத கட்சிகளுடன் கைகோர்க்க வேண்டும் எனவும், தலித் இயக்கங்களுடன் இணைய வேண்டும் என்றும் கூறியுள்ளார். தலித்துகள் இந்துக்கள் அல்ல என்று அவர் கூறினார். கேரளாவில் இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் சம அளவில் வசிப்பதால், அங்கு சென்று இஸ்லாமியர்கள் எல்லோரும் இணைந்து பிரத்யேக கட்சி தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.






0 Comments