தோவாளை அருகே செப்டிக் டேங்கில் விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.
தோவாளை பகுதியை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவர் வீட்டில் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று வீட்டில் மாடுகள் நடமாடி கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வீட்டில் உள்ள செப்டிக் டேங்கில் மாடு விழுந்துள்ளது. இதை பார்த்தவர்கள் உடனே நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் நிலைய அலுவலர் துரை தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செப்டிக் டேங்கில் விழுந்த மாட்டை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மீட்பதற்கு ஏதுவாக செப்டிக் டேங்கை ஜேசிபி மூலம் சிறிய அளவில் தோண்டிய பின்பு தீயணைப்பு வீரர்கள் உள்ளே இறங்கி மாட்டை வெளியே உயிருடன் கொண்டு வந்தனர்.