காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட சான்றிதழ்களைப் புதுப்பிக்க டிசம்பர் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. கடந்த 5 மாதங் களாக அத்தியாவசிய பணி களைத் தவிர வேறு பணிகள் நடக்கவில்லை. இதனைக் கருத் தில் கொண்டு காலாவதியான ஓட்டுநர் உரிமம் மற்றும் மோட்டார் வாகனங்கள் தொடர்பான சான் றிதழ்களை புதுப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது.

பிப்ரவரி 1, 2020-க்குப் பிறகு காலாவதியான ஓட்டுநர் உரிமம், மோட்டார் வாகன சான்றிதழ்களுக்கான புதுப்பித்தல் அவகாசத்தை செப்டம்பர் 30 வரை நீட்டித்து கடந்த ஜூன் மாதத்தில் சாலைப் போக்குவரத்து அமைச் சகம் அறிவித்தது. தற்போது இந்த அவகாசத்தை டிசம்பர் 31 வரை மேலும் நீட்டித்துள்ளது. அதன்படி காலாவதியான சான்றிதழ்கள் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாட்டில் இருக்கும் சூழலைக் கருத்தில் கொண்டும், மக்களுக்கு போதுமான போக்கு வரத்து வசதிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக அமைச்சகம் தெரி வித்துள்ளது. இந்தக் காலக்கெடு 3-வது முறையாக நீட்டிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.