அடுத்த 6 மாதத்திற்கு காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற காரியக் கமிட்டிக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தியே தொடர வேண்டுமென காரியக்கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக வலியுறுத்தப்பட்டதாக கூறினார். செயற்குழு கூட்டத்தின் முடிவில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அதில், காங்கிரஸ் கட்சி மற்றும் தலைமையை பலவீனமாக்க யாருக்கும் உரிமையில்லை.கட்சி தொடர்பான கருத்துகளை கட்சிக்குள் மட்டுமே கூற வேண்டும். பொது வெளியிலோ அல்லது ஊடகங்களிலோ கூறக்கூடாது.காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் விரைவில் நடைபெறும். அதுவரை கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார் உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கே.சி.வேணுகோபால் கூறினார்.