கொரோனாவை கட்டுபடுத்தும் வகையில் கடற்கரை கிராமங்களில் மூலிகை கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தும் வகையில் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மஞ்சள், கல்உப்பு, துளசி, வேம்பு, போன்ற இயற்கை கிருமிநாசினி தயாரித்து நான்கு வாகனங்கள் மூலம் கடற்கரை கிராமங்களில் தெளிக்கும் பணி தொடங்கியது. கொட்டாரம் காமராஜர் சிலை முன்பு தொடங்கிய நிகழ்ச்சிக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வக்கீல் பாலகிருஷ்ணன், ரெங்கநாயகி, கிறிஸ்டோபர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.