சசிகலாவின் 66வது பிறந்த நாளையொட்டி குமரி மேற்கு மாவட்ட அமமுக சார்பில் கிள்ளியூர், முஞ்சிறை, திருவட்டார் ,குழித்துறை உள்பட பல இடங்களில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிலாங்காலையில் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.சுருள கோடு குமாரபுரம் உள்பட பல இடங்களில் மரக்ன்றுகள் நடப்பட்டது. முஞ்சிறையில் அன்பு இல்லம் உள்பட இரண்டு இடங்களில் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.குமாரபுரம் குமரி மேற்கு மாவட்ட அமமுக அலுவலகத்தில் பிறந்த நாள் நிகழ்ச்சி நடந்தது மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ் கேக் வெட்டி இனிப்பு வழங்கினார். மேக்காமண்டபம் ஜங்ஷனில் திருவட்டார் தெற்கு ஒன்றிய செயலாளர் அகஸ்டின் தலைமையில் 66 நபர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைச் செயலாளர் டேவிட் ,வழக்கறிஞர், அம்மா பேரவை, சிறுபான்மை பிரிவு ,எம்ஜிஆர் மன்றம் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் சவுந்தர்ராஜ் ,விஜய் சந்திரன், ஜான்சன், பென் ராஜசிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ் ,திருவட்டார் வடக்கு ஒன்றிய செயலாளர் சுஜின்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் ஜெங்கின்ஸ் 66 பேருக்கு இலவச வேட்டி சேலைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் தக்கலை ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






0 Comments