மார்த்தாண்டம் வழியாக கேரளாவிற்கு மினி டெம்போ மூலம் கடத்த முயன்ற இரண்டரை டன் ரேஷன் அரிசியை விளவங்கோடு வட்டவழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி தினேஷ் சந்திரன் தலைமையிலான குழுவினர் குழித்துறை பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த மினி டெம்போவை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது டிரைவர் தப்பி ஓடினார்.
வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது இரண்டரை டன் ரேஷன் அரிசி இருந்ததும், கேரளாவிற்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதைதொடர்ந்து இரண்டரை டன் ரேஷன் அரிசியும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி டெம்போவையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் வாகனத்தை விளவங்கோடு தாலுகா ஆபீசிலும், அரிசியை காப்புக்காடு அரிசி குடோனிலும் ஒப்படைத்தனர்.






0 Comments