தங்கள் வீட்டு பெண்ணை காதல் திருமணம் செய்த இளைஞரை கடுமையாக தாக்கிவிட்டு அந்த குடும்பத்தினர் பெண்ணை தூக்கிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி அடுத்த மங்களம் கிராமத்தை சேர்ந்த அச்சுதம் என்பவரும், மஞ்சக் கொல்லை புதூர் என்ற கிராமத்தை சேர்ந்த நந்தினி என்ற பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஆனால் அவர்களின் வீட்டில் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து இருவரும் வீட்டைவிட்டு வெளியேறினர். கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டு கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் வசித்து வந்தனர். அவர்களின் குடியிருக்கும் வீடு பெண்ணில் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் ஊரில் இருந்து புறப்பட்டு கோவை சென்றனர்.

அவர்களை பார்த்த புதுமண ஜோடி தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தார் இருவரையும் விரட்டிப்பிடித்து, அந்த இளைஞரை சாலையில் வைத்து கடுமையாக தாக்கிவிட்டு, பெண்ணுடன் சென்றுவிட்டனர். இதுகுறித்து அச்சுதன் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். தப்பிச் சென்ற பெண்ணின் குடும்பத்தினரை அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் தேடி வருகின்றனர்.