அதிகமாக உணவு கேட்டதால் குழந்தைக்கு சூடு வைத்து சித்ரவதை செய்த பாட்டி, தாய், சித்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பெங்களூரு மைக்கோ லேஅவுட் போலீஸ் எல்லைக்குட்பட்ட குருப்பனபாளையா பகுதியை சேர்ந்தவர் இம்ரான் பாஷா. இவரது

இவர்கள் மாமியார் முபினா வீட்டில் கூட்டு குடும்பமாக வசிக்கின்றனர். இந்நிலையில், குழந்தை அதிகமான உணவு கேட்டதால் பாட்டி முபினா குழந்தையை தாக்கி சூடு வைத்து வந்தார். இதுபோல், தொடர்ந்து 15 நாட்களாக செய்து வந்தார். இதை தாய் அஜீராவும் கேட்கவில்லை. குழந்தையின் உடலில் தீக்காயங்கள் பார்த்த தந்தை இம்ரான்பாஷா இது குறித்து மனைவியிடம் கேட்டார். இதற்கு மனைவியும், மாமியாரும் பல்வேறு காரணங்களை சொல்லி அவரது கவனத்தை திசை திருப்பி உண்மையான காரணத்தை தெரிவிக்கவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன் இதே போல் மறுபடியும் சம்பவம் நடந்தது. இதை பார்த்த தந்தை தட்டி கேட்டார். இதில் ஆத்திரமடைந்த மாமியார் கேள்வி கேட்டால் குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்று தெரிவித்தார். இதனால் இம்ரான்பாஷா அமைதியாக இருந்தார். குழந்தையை தாக்கி சூடு வைக்கும் போது அதை தடுக்காமல் இந்த காட்சியை குழந்தையின் சித்தி செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இது வைரலாக பரவியது. அதே போல் பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து மைக்கோ லே-அவுட் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் குழந்தையை மீட்டு இந்திராகாந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாய், பாட்டி, சித்தி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






0 Comments