நாகர்கோவில் வடசேரி கேசவதிருப்பாபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ் (வயது 38). போட்டோ கிராபர். சம்பவத்தன்று இரவு படுக்கை அறையில் மர்ம உறுப்பில் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணேஷ் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக வடசேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணைக்கு பிறகு கணேஷின் மனைவி காயத்ரி. கள்ளக்காதலன், கூலிப்படை உதவியுடன் கணவரை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
அதன்படி காயத்ரி, கூலிப்படையை சேர்ந்த விஜயகுமார், கருணாகரன் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். காயத்ரியின் கள்ளகாதலன் யாசின் தலைமறைவாகிவிட்டார். தற்போது அவர் வெளிநாடு தப்பி செல்ல முயற்ச்சிப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து கணேஷ் வீடு திரும்பினார். வீட்டிற்கு சென்ற அவர் அங்குள்ள வேறு ஒரு படுக்கை அறையில் தங்கியிருந்தார். தொடர்ந்து தன்னை கொல்ல முயன்ற படுக்கை அறையை சுத்தம் செய்தார். அப்போது அங்கு அவரது படுக்கைக்கு கீழே கத்தி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீசார் கணேஷின் வீட்டிற்கு விரைந்து சென்றனர். பின்னர் படுக்கைக்கு கீழே இருந்த கத்தியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கணேஷை கொலை செய்ய முயன்ற கத்தியை ஏற்கனவே போலீசார் பறிமுதல் செய்த நிலையில், இன்னொரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வழக்கில் கந்து வட்டிக்கு காயத்ரி, அவரது உறவினர்களுக்கு லட்சகணக்கில் பணம் வழங்கிய பிரமுகரும் சம்பந்தப்பட்டு இருக்கலாமோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






0 Comments