அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமையில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பயிற்சி உதவி கலெக்டர் ரிஷாப், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஜான் பிரிட்டோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.