மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், "கொரோனாவின் ஆரம்ப அறிகுறிகளைப் பெற்றவுடன், நான் சோதனை செய்ய முடிவு எடுத்தேன். சோதனையில் கரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
கொரோனாவால் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். லக்னோவின் சஞ்சய் காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் கமல் ராணி வருண் (62) காலமானார்.
கடந்த 24 மணி நேரத்தில் 54,735 பேர் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 17,50,723 ஆக உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்லாக் 3 மூலம் நாடு முழுவதும் ஊரடங்குகள் சிலவற்றுக்கு நீக்கப்பட்டவுடன் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இருந்தாலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், சினிமா அரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பார்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தைக் காணும் இடங்களை அரசாங்கம் இன்னும் திறக்கவில்லை.
இந்த ஆண்டு ஜனவரியில் கேரளாவில் முதல் பாதிப்பு பதிவாகிய பின்னர் 110 நாட்களில் நாட்டில் ஒரு லட்ச பாதிப்புகள் தாண்டியது. அதுவே 185 நாட்களுக்குப் பிறகு 17 லட்சம் பாதிப்புகள் ஆகியுள்ளது. நாட்டில் மொத்த பாதிப்புகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் மற்றும் மொத்த இறப்புகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஜூலை மாதத்தில் பதிவாகி உள்ளது.






0 Comments