குமரி மாவட்டம் திருப்பதிசாரத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை. போக்சோ சட்டத்தின் கீழ் சமையல்காரர் கைது. அனைத்து மகளிர் போலீசார் தொடர் விசாரணை.

குமரி மாவட்டம் திருப்பதிசாரம் பகுதியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று மதியம் பக்கத்து தோப்பில் கட்டி இருந்த ஆட்டை அவிழ்ப்பதற்காக சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை.
அவரது தாயார் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவரது பக்கத்து வீட்டில் இருந்து மாணவி வெளியே வந்தார். இதை பார்த்த தாயார் மாணவியிடம் கேட்டபோது அந்த வீட்டை சேர்ந்த நபர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அந்தப் பெண் இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் அந்த வீட்டில் இருந்த ஜான்சன் 45 என்பவரை கைது செய்தனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ஜான்சனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். சமையல் வேலை செய்து வந்த அவர் இன்று வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற சிறுமியை அழைத்து வீட்டின் உள்ளே வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது தாயாரின் குரல் கேட்கவே சத்தம் கொடுத்தால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இதுகுறித்து யாரிடமும் கூறக்கூடாது என்று மாணவியை மிரட்டி அனுப்பியது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.






0 Comments