ரேஷன் கடைகளில் பொருட்களுக்கு பணம் வாங்க கூடாது, அரசு அறிவித்த படி முககவசங்களை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தோவாளை தேவர் நகரில் உள்ள ரேஷன் கடை முன்பு கொட்டும் மழையில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தோவாளை ஒன்றிய தி.மு.க செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தி.மு.க. செயலாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். இதில் ஊராட்சி துணைத்தலைவர் தாணு, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜ பாபு, கிளை பிரதிநிதி கமல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பூதப்பாண்டி பேரூர் தி.மு.க. சார்பில் திட்டுவிளை ரேஷன் கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூர் செயலாளர் ஆலிவர்தாஸ் தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் சுந்தர் முன்னிலை வகித்தார். இதில் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.






0 Comments