குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 62). மீன் பிடி தொழிலாளி. இவர் கடந்த 7-ம் தேதி லியோன் நகரை சேர்ந்த ஜெனிபர் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் வழக்கம் போல் பிடிக்க சென்றார்.

அவருடன் அவரது மகன் ரெஜினால்டு மெர்பின் (24) உள்பட 16 பேர் சென்றனர். 9-ம் தேதி அவர்கள் கடல் பகுதியில் இருந்து 32 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது ஸ்டீபனை திடீரென படகில் காணவில்லை. அவர் தவறி கடலில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவரை உடன் சென்ற மீனவர்கள் தேடினர். ஆனால் ஸ்டீபன் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவரது மகன் ரெஜினால்டு மெர்பின் செல்போன் மூலம் கரையிலுள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து அவர் சென்ற படகினரும், வேறு படகில் உறவினர்களும் சென்று அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆழகடலில் மாயமான மீனவர் ஸ்டீபனுக்கு மரிய கொரைட்டி என்ற மனைவியும், ரெஜினால்டு ரூபன் (27) என்ற இன்னொரு மகனும் உள்ளனர். இது குறித்து குளச்சல் மீன்பிடி பயிற்சி நிலைய துணை இயக்குநர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.






0 Comments