களியக்காவிளை அருகே மேக்கோடு பனச்சகுழியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவர், மனைவியுடன் தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். சந்தோஷ்குமார் வீட்டுக்கு திரும்பி வந்த போது, பின்புற கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்க மோதிரம், எல்.இ.டி. டி.வி. ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மர்ம நபர் கதவை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுபற்றி களியக்காவிளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






0 Comments