தமிழகத்தில் கடந்த ஐந்து மாதங்களாக பேருந்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இடையில் மண்டலங்கள் பிரித்து அதற்குள் பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆனால் அதற்குபிறகு கொரோனா பரவல் அதிகமானதை அடுத்து பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்லவும், பிறமாநிலங்கள் செல்ல இருக்கும் இ-பாஸ் நடைமுறை இனி கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்தை தாமதிக்காமல் தொடங்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.