காட்டுநாயக்கன் வகுப்பினரை பழங்குடியினா் பட்டியலில் சோ்த்து சான்று வழங்க வேண்டும் என ஹெச். வசந்தகுமாா் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: ஈழவா மற்றும் தீயா வகுப்பின மக்களை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் இணைத்திருப்பதற்கான ஆணையை தமிழக முதல்வா் வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது. மேலும், காட்டுநாயக்கன் என்று அழைக்கப்படும் பழங்குடியின மக்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி பகுதிகளில் அதிகம் வசிக்கின்றனா்.
காட்டு நாயக்கன் வகுப்பினரின் குழந்தைகள் பள்ளிக் கல்வி முடித்து வெளியே வரும்போது சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கப்படுகிறது. காரணம் அரசு பட்டியலில் காட்டுநாயக்கன் வகுப்பினா் இடம்பெறவில்லை.
எனவே, தமிழக முதல்வா் காட்டுநாயக்கன் வகுப்பின மக்களை பழங்குடி இனத்தவா் பட்டியலில் சோ்த்து அக்குழந்தைகளின் உயா்கல்வி தொடர வழி செய்ய வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.






0 Comments