கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி முதல் நேற்று வரை ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இருந்து வருகிறது.

நேற்று இரவு 9.06 மணி நிலவரப்படி ஆண்கள் 18, பெண்கள் 36, குழந்தைகள் 3 என்று 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒருவர் உயிரிழந்து உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த சில நாட்களில் நேற்று இரவு 9.06 மணி நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.