மும்பையிலிருந்து 115 நாட்கள் நடந்தே வந்து, கும்மிடிப்பூண்டியில் தஞ்சமடைந்த சொரியாசிஸ் நோயாளி மீட்கப்பட்டுள்ளார்.

சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மும்பையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்த காஞ்சிபுரம் வளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன். 47 வயதானவர் சொரியாசிஸ் நோய்க்கு மருந்து கிடைக்காமல் அவதிப்பட்டு வந்துள்ளார்.
சென்னை கேஎம்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற இ-பாஸிற்கு விண்ணப்பத்தும் அனுமதி கிடைக்காமல் இருந்துள்ளார். மாத்திரை வாங்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில் வியாதியின் அதிகரிப்பால் வேறுவழியின்றி ஆயிரத்து 306 கிலோமீட்டர் நடந்தே சென்னை வந்துள்ளார். 115 நாட்கள் நடந்தே வந்து கும்மிடிப்பூண்டியில் தஞ்சம் புகுந்துள்ளார்.
கேட்பாரற்று கிடந்த அவரை கும்மிடிப்பூண்டி துணை காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் மீட்டு, கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜன் உதவியுடன், 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.






0 Comments