குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்தோடு இணைக்க நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி புதுக்கடையில் உள்ள தியாகிகள் நினைவு ஸ்தூபிக்கு நாடார் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நாடார் மகாஜன சங்கம் துணைத்தலைவர் சுரேந்திரகுமார் தலைமை தாங்கினார்.

பனங்காட்டுபடை கட்சி மாநில செயலாளர் பாலசிவநேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் விமல், தமிழ்நாடு சான்றோர் நாடார் சங்க தலைவர் ரெஜிசிங், இளைஞரணி செயலாளர் ஜெபர்சன், மேற்கு மாவட்ட தலைவர் டென்னிஸ் மற்றும் நிர்வாகிகள் கருங்கல் ஜார்ஜ், ஜோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.