கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் அறிவுரையின் பேரில் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் கிருமிநாசினி தெளித்தல், பிளச்சிங் பவுடர் தூவுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கன்னியாகுமரியில் முககவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு அபராதமும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன் உத்தரவுபடி கன்னியாகுமரி பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு வீடு, வீடாக சென்று கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது. பெரிய நாயகிதெரு, லூர்துமாதாதெரு, சர்ச்ரோடு, வாவத்துறை, ரட்சகர்தெரு மற்றும் ஐகிரவுண்ட் பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பேரூராட்சி சார்பில் நாள்தோறும் 1000 பேருக்கு கபசுர குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அலுவலர் முருகன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






0 Comments