நாகர்கோவில் மணிமேடையில் உள்ள செல்போன் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. வங்கி ஊழியர்கள், நகைக்கடை ஊழியர்கள், மருந்து கடை ஊழியர்கள் என்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
நாகர்கோவில் மணிமேடை அருகில் உள்ள ஒரு செல்போன் கடை ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதை தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் உத்தரவுப்படி மாநகர் நல அலுவலர் கின்சால் மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தனர்.