நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் ஆணையர் ஆஷா அஜித் அறிவுரைப்படி கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் நடந்தது.

முகக்கவசம் அணிவதின் அவசியம் குறித்தும், சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்தும் விழிப்புணர்வை கலைக்குழுவினர் ஏற்படுத்தினர். கொரோனா நோயாளிகளை யாரும் சந்தேக பார்வையோடு பார்க்க கூடாது. அவர்களை கேலி செய்ய கூடாது. அவர்களின் மனம் புண்படும் படியாக யாரும் நடந்து கொள்ள கூடாது போன்ற அறிவுரைகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.






0 Comments