கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராம பங்குத்தந்தைகள், மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தலைமையில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே முன்னிலையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தேங்காய் பட்டணம் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கேரளா பதிவு பெற்ற படகுகளை மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும். முகத்துவாரத்தை ரூ. 1.60 கோடி செலவில் ஆழப்படுத்த வேண்டும் அதற்கான திட்ட மதிப்பீடு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

நுழைவு வாயில் சீர்படுத்துவதற்கு தேவையான நிதியினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் மாநில மீன்வள கூட்டுறவு இணைய பெருந்தலைவர் சேவியர் மனோகரன், கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குநர் பங்குத்தந்தை ஸ்டீபன், சைமன் காலனி பங்குத்தந்தை ஜாண்சிபு, வாணியகுடி பங்குத்தந்தை ஆன்றோ, கன்னியாகுமரி பங்குத்தந்தை கிறிஸ்துராஜ், மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோர் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் தெரிவித்தார்