குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த பெண் கழுத்தில் கத்தியால் குத்திக் கொலை. குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளம் வசந்தம் நகர் பகுதியை சேர்ந்தவர் நீலாவதி 42.

அப்பகுதியில் உள்ள பேக்கரியில் உதவியாளராக வேலைபார்த்து வந்தார். நீலாவதிக்கு இவரது கணவரான ராமதாஸ் என்பவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக கணவரை பிரிந்து அவரது ஒரே மகனான அஜித் என்பவருடன் தனியாக வசித்து வந்தார். ராமதாஸ் ஆசாரிப்பள்ளம் வசந்தம்நகரில் மரப்பட்டறை நடத்தி வருகிறார். இந்நிலையில், நீலாவதிக்கும் அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதனை கணவர் ராமதாஸ் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் நீலாவதி கள்ளக்காதல் தொடர்பை விடவில்லை.

இன்று காலை நீலாவதியும் அவரது மகனும் வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து வெளியே வராததால் பக்கத்து வீட்டிலுள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தபோது லீலாவதி கழுத்தில் குத்து பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக காணப்பட்டார். இதுகுறித்து பொதுமக்கள் ஆசாரிபள்ளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் நீலாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து ஆசாரிப்பள்ளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கணவர் ராமதாஸ் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அப்போது, அவர் கள்ளகாதலனுடன் இருந்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டேன் என கூறியதாக தெரிகிறது. கள்ளகாதலனுடன் இருந்த பெண்ணை கணவன் கத்தியால் குத்தியது, அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






0 Comments