கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நாகர்கோவில் பகுதிகளில் உள்ள பல கழிவு நீரோடைகளில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் மழை தண்ணீர் கழிவு நீரோடைகளை நிரம்பி சாலை வழியாக தண்ணீர் பாய்ந்தோடுவதும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்து மக்களை அவதியடைய செய்யும் நிலை உருவாகியது.

பருவமழை காலங்களில் சிரமங்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடசேரி புத்தேரி சாலையில் உள்ள கழிவு நீரோடை, டிஸ்லரி ரோடு, கிறிஸ்து நகர், கேபி ரோடு உட்பட மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு நீரோடைகளை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் ஆய்வு செய்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார்.






0 Comments