நாகர்கோவிலில் தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வங்கி ஊழியர்களுக்கு பரவுவது அதிகரித்து வருகிறது. நாகர்கோவில் மணிமேடை அருகே செயல்படும் தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித்மாநகர் நல அலுவலர் கின்சால் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பகவதி பெருமாள் மாநகராட்சி பணியாளர்கள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.