கன்னியாகுமரி அருகே வீட்டுக்குள் புகுந்த விஷ பாம்பு. ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு படை வீரர்கள் பாம்பை போராடி மீட்டனர். குமரி மாவட்டம் கன்னியாகுமரியை அடுத்துள்ள சுவாமிபுரத்தில் இன்று காலை திடீரென குடியிருப்பு பகுதிக்குள் விஷ பாம்பு புகுந்தது. பாம்பை கண்ட பொதுமக்கள் அச்சத்துடன் அங்குமிங்குமாக அலறியடித்து ஓட தொடங்கினர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் சுபாஷ் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடசுப்பிரமணியன் தலைமையில் வந்த வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த விஷப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.