நாகர்கோவிலில் நேற்று மாலை 5.30 மணிக்கு பலத்த சூறைக் காற்றுடன் பெய்யத் தொடங்கியது. அப்போது பாலமோர் சாலை யில் அண்ணா விளையாட்டரங்க நீச்சல்குளம் அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் மேற்கூரை நடுப்புற பகுதியின் இணைப்பு பெயர்ந்து பலத்த சத்ததுடன் கீழே சரிந்தது. இதனையடுத்து ஊழியர்கள் பதறி ஓடினர்.
பின்னர், சரிந்து விழுவது நின்றதையடுத்து, காலி பேரல்களை வைத்து உடைந்து சரிந்த பகுதியில் முட்டுக்கொடுத்தனர். இதுபற்றி தகவலறிந்த மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து தீயணைப்பு துறையினர், தீ அணைப்பு மீட்பு அலுவலர் துரை தலைமையில் வந்தனர். அப்போது தீ விபத்து போன்ற ஆபத்து ஏற்படாது மேலும் அங்கு வந்த போலீசாரிடம் பெட்ரோல் பங்க் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வருவோரை தடுக்கும் பொருட்டு, பங்க் அருகே சாலையின் இருபுறமும் கூடுதல் பேரிகார்டுகள் வைத்து, வாகனங்கள் வராமல் இருக்க பங்க் ஊழயர்களை நியமித்தனர்.