கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் மாவட்ட தலைமை அலுவலகம் மாவட்ட மக்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு அண்ணா ஸ்டேடியம் எதிர்புறத்தில் உள்ள பில்லர்ஸ் கேட் வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் எம் இப்ராஹிம் கான். தலைவர் எம். மீரான் மைதீன், பொதுச் செயலாளர் ஹிமாம் பாதுஷா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தை மாண்புமிகு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் Bsc bl அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

மத நல்லிணக்கத்தின் முன்னோடியாக சுவாமி தோப்பு அய்யா வைகுண்ட பதி பால ஜனாதிபதி அவர்கள் மற்றும் ஐக்கிய கிறிஸ்தவ பேரவை துணைத்தலைவர் பாஸ்டர் C.ஞானதாஸ், பேராயர் இமானுவேல் , ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் நசீர் உசேன். மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ் ஆர் ஹாஜி பாபு.

மாவட்ட துணைத்தலைவர்கள் மிடாலம் சா என்ற சாகுல் அமீது, பீர்முகம்மது ,எ.ரபீக், மாவட்ட துணைச்செயலாளர்கள் எம்.சம்சுதீன், எஸ். எம். மாகீன். குளச்சல் எம்.ஏ நாசர்.

மாவட்ட ஆலோசனைக் கமிட்டி நிர்வாகி அல்-அமீன் சாகுல் ஹமீது ,ஷேக் உமர்.
மாவட்ட இளைஞரணி தலைவர் எஸ்.ஏ. முகமது அயூப் கான்.
மாவட்ட இஸ்லாமிய வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஷேக் அப்துல் ஹமீத்.
மாவட்ட கல்வி குழு துணைத் தலைவர் மணலிக்கரை மீரான் மைதீன்.
மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் எம்.ஏ.கே. சலீம். பொருளாளர் முகமது சலீம். நாகர்கோவில் மாநகரத் தலைவர் ஜாகிர் உசேன். துணைத் தலைவர் ஜெகபர் சாதிக். ஹைதர் அலி. உசேன்.

மாநகர இளைஞரணி தலைவர் நவாஸ் அன்வர், பொருளாளர் சுலைமான் நபீல், துணை செயலாளர் எஸ் .பஷீர். நாகர்கோவில் மாநகர தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அயூப்கான் , துணைத் தலைவர் அன்சீன் பஷீர், இப்னு அப்பாஸ், பொருளாளர் ரபீக்.

நம்பாளி கிளைத்தலைவர் முஹம்மது தாரிக், செயலாளர் சபீக் அஹமத், திருவிதாங்கோடு இளைஞர் அணி அப்சல், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தனர்.


அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றிய தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் அவர்கள் உரையாற்றியபோது கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மிகவும் பாராட்டுக்குரியது குறிப்பாக சி ஏ ஏ. என் ஆர் சி .என் பி ஆர் போன்ற திட்டத்தை எதிர்த்து தமிழகத்திலேயே மிகப் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை இந்த கூட்டமைப்பு நடத்தியதோடு நிறுத்தாமல் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை நேரில் சந்தித்து மனு அளித்து தங்கள் உரிமைக்காக தமிழகத்தில் என் பி ஆர். சி ஏ ஏ. என் ஆர் சி கணக்கெடுக்கும் பணியை தமிழகத்தில் துவங்க கூடாது அந்த பணியை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழகத்திலேயே துணிச்சலாக நேரடியாக தமிழக முதலமைச்சரை கண்டு மனு கொடுத்த அந்தச் செயலை பாராட்டுகின்றேன் .



மனுவை பெற்றுக்கொண்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்ட முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு வாக்குறுதி கொடுத்தார் நிச்சயமாக தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் என் ஆர் சி என்பிஆர். சிஏஏ. போன்ற கணக்கெடுப்பு தமிழகத்தில் துவங்க மாட்டோம் மட்டுமல்ல இந்த சட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.

அதுமட்டுமல்ல இந்த கூட்டமைப்பு எந்த கோரிக்கை வைத்தாலும் அதை நிறைவேற்ற நான் உறுதுணையாக இருப்பேன் என்றும் வாக்குறுதி அளித்து உரையாற்றினார்கள்.









0 Comments