முன்னாள் ஜனாதிபதி பிணராப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி. 84 வயதாகும் அவர் வழக்கமான சோதனைக்காக மருத்துவமனை சென்றார். அப்போது அவருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. முடிவில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: வேறு சில உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, அங்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஒரு வார காலத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு வலியுறுத்திக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.