கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி சின்னவிளை எனும் கிராமத்தை சேர்ந்த 50 வயது நபர் ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிட்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

அவரின் உடலை நல்லடக்கம் செய்ய வேண்டி அவரது உறவினர்கள் மற்றும் திமுக குருந்தங்கோடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் குட்டிராஜன் எஸ்டிபிஐ கட்சியின் குமரி மாவட்ட நிர்வாகிகளை கேட்டுக்கொண்டனர்.
இதனை அடுத்து நேற்று மாலை அவரது உடலை உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் அடிப்படையில் SDPI கட்சியினர் அடக்கம் செய்தனர்.

மாவட்ட பொறுப்பு தலைவர் சுல்ஃபிக்கர் அலி அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் குளச்சல் தொகுதி தலைவர் ஜப்பார் தலைமையிலான குழு பாதுகாப்பான முறையில் உடலை அடக்கம் செய்தனர். அவர்களுக்கு மணவாளக்குறிச்சி SDPI கட்சியினர் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.
செய்தி: SDPI ஊடகப்பிரிவு
மணவாளக்குறிச்சி






0 Comments