திரைப்பட பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என, மருத்துவமனைநிர்வாகம் தெரிவித்துள்ளது.பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்; கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை, எம்.ஜி.எம்., ஹெல்த்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை, இம்மாதம், 13ம் தேதி நள்ளிரவில் திடீரென மோசமானது. இதையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்ட அவருக்கு, செயற்கை சுவாசம், எக்மோ போன்ற உயிர் காக்கும் மருத்துவ தொழில்நுட்பத்தின் வாயிலாக, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதன்பயனாக, எஸ்.பி.பி.,யின் உடல்நிலைசற்று சீரடைந்தது.

இந்நிலையில், அவர் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.அவரது உடலில் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகளை,மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, எஸ்.பி.பி., பூரண நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என, பல்வேறு தரப்பினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். மகள் பல்லவி வெளியிட்ட செய்திஅம்மா நலமாக இருக்கிறார். அடுத்த இரு நாட்களுக்கு மருத்துவ கண்காணிப்பில் இருப்பார். இந்த காலக்கட்டத்தில் 'டிஸ்சார்ஜ்' செய்யப்படலாம்.சகோதரர் சரண் நன்றாக இருக்கிறார். அப்பாவை சிறப்பு அறைக்கு மாற்றியுள்ளனர்.அவருக்கு 'வென்டிலேட்டர்', 'எக்மோ' கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

'வென்டிலேட்டரில்' இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுவித்து, சுவாசிக்க வைக்கடாக்டர்கள் திட்டமிட்டுள்ளனர். பின் அவரது நுரையீரல் குணமடைய வேண்டும். சுயமாக சுவாசிக்கும் நிலையை எட்டியவுடன் 'எக்மோ'அகற்றுவர். மெதுவாக தான் குணமடைவார். இப்போது மயக்க நிலையில் வைத்துள்ளனர்.

அவ்வப்போது மயக்கநிலையில் இருந்து விடுவிக்க முயற்சிக்கின்றனர். சிகிச்சைக்கு நல்ல ஒத்துழைப்புஅளிக்கிறார்.அருகில் இருப்பவர்களை அடையாளம் கண்டு கொள்கிறார்.இவ்வாறு செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.மகன் எஸ்.பி.பி., சரண் வெளியிட்ட வீடியோவில் கூறியது''எனது தந்தை உடல்நிலை நேற்று இருந்தது போல் சீராக உள்ளது. அவரது உடல்நிலையில் எந்த பிரச்னையுமில்லை.எனது தந்தைக்காக பிரார்த்தனை மற்றும் வேண்டுதல் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்,'' என்று கூறியுள்ளார்.