குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 7600 ஐ தாண்டியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 119 ஆக அதிகரித்துள்ளது.
குமரி மாவட்டத்தில் கொரோனா வேகம் கூடுவதும், குறைவதுமாக மாறி, மாறி வந்து கொண்டிருக்கிறது. தினமும் 200, 250 என பாதிப்பு எண்ணிக்கை இருந்த நிலைமாறி கடந்த சில நாட்களாக சராசரியாக நாள்தோறும் 120, 130 என பாதிப்பு வந்தநிலையில் இருந்தன.

இந்நிலையில் நேற்று முன்தினம் பாதிப்பு எண்ணிக்கை 162 ஆக இருந்தது. நேற்றும் மீண்டும் 209 ஆக உயர்ந்துள்ளது. மொத்தபாதிப்பு 7,699 ஆக உள்ளது. 6,113 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு ஆசாரிப்பள்ளம் இரவு ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 90 வயது மூதாட்டி மற்றும் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 2 ஆண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்டத்தில் மொத்தம் 119 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாவட்டம் முழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் சளி பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.