தேங்காய்பட்டணம் துறைமுக பைபர் மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் 9 கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.
மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, தேங்காய் பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் அடிக்கடி சுத்தம் செய்யாமல் மோசமாக உள்ளது. இதனால் தொற்று நோய்கள் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே துறைமுகத்தை தினசரி சுத்தம் செய்ய பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். உயிர் பலி வாங்கி கொண்டிருக்கும் முக தூவாரத்தில் குவிந்திருக்கும் மணல் மேட்டை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடல் சீற்றத்தால் உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கும் தமிழக அரசு தலா 25 லட்சம் ரூபாய் வழங்குவதோடு அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மீண்டும் உயிர் பலி ஏற்படாத வண்ணம் அலை தடுப்பு சுவரை இரண்டு பக்கத்திலும் 250 மீட்டர் தூரத்தில் நீட்ட வேண்டும் என்பது உட்பட 9 கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.