குமரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களில் கொரோனாவிலிருந்து நோயாளிகள் விரைந்து விடுதலை பெற யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

குமரி மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பத்மநாபபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆயுர்வேத கல்லூரி மருத்துவமனை மற்றும் 4 தனியார்மருத்துமனைகளிலும் 3 கோவிட் பராமரிப்பு மையங்களிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றில், அரசு மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களில் உள்ளவர்களுக்கு யோகா பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. யோகாவில் மூச்சு பயிற்சியில் ஈடுபடுத்தி நோயாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன் மூலம் உடலில்ஆக்சிஜனின் அளவை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி உடலுக்கு கொரோனாவிலிருந்து விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் மனதளவில் சோர்வடைந்தவர்கள்உற்சாகமடையவும் யோகா பயன்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.






0 Comments