முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு ராமன்புதூர் சந்திப்பில் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட தி.மு.க. சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் செல்வின் சுபாஷ் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் தாமஸ் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சுரேஷ், இளைஞரணியை சேர்ந்த செல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






0 Comments