குமரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நேற்று காலை முதல் இன்று காலை வரை கொரோனா வால் பாதிக்கப்பட்டு 50 பேர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத் திரியில் அனுமதிக்கப்பட் டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 45 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளார்கள். தற்போது கொரோனா வார்டில் 845 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்றில் இருந்து இது வரை 9,092 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதுவரை கொரோனா விற்கு 180 பேர் பலியாகி இருந்த நிலையில் நேற்றிரவு மேலும் 2 பேர் இறந்துள்ளனர். நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவரும், என்.ஜி.ஓ. காலனி பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி ஒருவரும் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 182 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.
ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் கொரோனாவால் ஏராளமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வாலிபர்கள், முதியவர்களும் கொரோனாவுக்கு பலியாகி வருகிறார்கள்.
கடந்த 1-ந்தேதி முதல் இன்று வரை கொரோனாவிற்கு 17 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினர் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகளின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.
மாவட்டம் முழுவதும் சுமார் 7 ஆயிரம் பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் 131 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். களப்பணியாளர்கள் மூலமாகவும், சோதனை சாவடிகள் மூலமாகவும் இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரத்து 362 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டுள்ளது.






0 Comments