ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்க ஒப்புக்கொண்டது.
ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5 ஆயிரம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர். ஆப்கானிஸ்ஸ்தான் சிறையில் பலகட்டங்களாக 4 ஆயிரத்த் 600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஒப்பந்தத்தில் எஞ்சிய 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்த 400 பயங்கரவாதிகளும் உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி எச்சரிக்கை விடுத்தார். தற்போது, 400 பயங்கரவாதிகளில் 391 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த 9 பயங்கரவாதிகளும் கத்தார் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவேளை எஞ்சிய 9 பயங்கரவாதிகளையும் விடுதலை செய்தால் மட்டுமே ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என தலிபான்கள் தெரிவிக்கும் பட்சத்தில் அமைதிபேச்சுவார்த்தை நடைபெறுவதில் மேலும் சிக்கல் ஏற்படலாம்.