இந்திய முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வருகிறது. இதில், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உட்பட பலரும் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை மொத்தம் 84,674 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 70,674 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்குப் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 1095 ஆக அம்மாநிலத்தில் உள்ளது.
இதற்கிடையே நேற்று அம்மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ராஜேந்திர ரத்தோருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியாவுக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. இதனை அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரின் அந்த பதிவில், "எனக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லை. இருப்பினும் எனக்கு கொரோனா தோற்று உறுதியாகியுள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன்" என்று சதீஷ் பூனியா தெரிவித்துள்ளார்.






0 Comments