ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு பரோல் கிடையாது என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 28 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர் பேரறிவாளன். அடிக்கடி தனது தந்தையின் உடலை காரணம் காட்டி வெளியே பரோலில் சென்று வந்தார். கடந்த ஆண்டு கூட இவருக்கு 2 முறை பரோல் வழங்கப்பட்டது. இதனையடுத்து கடந்த மாதம் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்த போது, கொரோனா அச்சத்தால் பேரறிவாளனின் பரோல் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் சிறை தண்டனை நிறுத்திவைப்பு விதிகளில் பரோலுக்கு இடமில்லை என்றும் சிறைத்துறை விளக்கம் அளித்தது. இதனைத்தொடர்ந்து பேரறிவாளனின் பரோலில் தமிழக அரசு ஏன் முடிவெடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அவரது பரோல் மனு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் பேரறிவாளனின் பரோல் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிறைத்துறை பரோல் மனுவை நிராகரித்ததால், தமிழக அரசும் தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. அதனை கேட்டுக் கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் செப்.8 ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.






0 Comments