செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதத்திற்கு மாணவர் ஒருவருக்கு தலா 10 முட்டைகளை வழங்க தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ்‌ தொற்று காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால்‌ மீண்டும்‌ இயல்பு நிலைக்கு திரும்பி பள்ளிகள்‌ திறக்கப்படும்‌ நாள்‌ வரை உள்ள பள்ளி வேலை நாட்களுக்கு மட்டும்‌ புரட்சித்‌ தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ சத்துணவுத்‌ திட்டத்தில்‌ பயனடையும்‌ தொடக்கப்பள்ளி பயனாளிகளுக்கு சத்துணவு பொருட்கள் வழங்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜீன்‌, 2020 மாதம்‌ முதல்‌ மே-2020 வரை நாளொன்றுக்கு 100 கிராம்‌ அரிசியும்‌ 40 கிராம்‌ பருப்பும்‌, சத்துணவுத்‌ திட்டப்‌ பயனாளிகளுக்கு உலர்‌ உணவுப்‌ பொருட்கள் உட்பட பள்ளிகளில்‌ வழங்கியது.

அதே போல முட்டைகளையும்‌ கொரோனா தொற்றுக்‌ காலம்‌ முடியும்‌ வரை வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாதத்திற்கு மாணவர் ஒருவருக்கு தலா 10 முட்டைகளை வழங்க உத்தரவிட்டுள்ளது