தமிழகத்தில் உள்ள அட்வென்ட் சர்ச்களின் சென்னை மாவட்ட பிஷப்பாக எஸ்.டி.டேவிட் என்பவர் உள்ளார். மேலும் 100 சர்ச்கள், 50 பள்ளிகள் என பல நிர்வாகங்கள் இவரது தலைமையில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை வேளச்சேரியில் அட்வென்ட் சர்ச்சுக்கு சொந்தமான சொத்து ஒன்று உள்ளது. இந்த சொத்தின் மதிப்பு சுமார் ரூ.50 கோடிக்கும் மேலாக இருக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அட்வென்ட் சர்ச்சுக்கு சொந்தமான இடத்தில் ஸ்கூல் ஒன்று கட்டுவதற்காக திருச்சியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் எஸ்.டி.டேவிட்டிடம் ரூ.26 கோடிக்கு அந்த இடத்தை வாங்கி கொள்வதாக விலை பேசி ரூ.3.85 கோடி முன்பணமாக சத்தியமூர்த்தி டேவிட்டிடம் கொடுத்து உள்ளார்.

அதன் பிறகு டேவிட் சர்ச்சிக்கு சேர வேண்டிய பணத்தை சர்ச்சின் அக்கௌன்ட்டில் போடாமல் இருந்து உள்ளார். மேலும் சாத்தியமூர்த்திக்கும் அந்த இடத்தை கொடுக்கவில்லை.

இதனால் பணம் கொடுத்த சத்தியமூர்த்தி திருச்சி மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். இதனை அடுத்து அவர்கள் சென்னையில் இருந்த டேவிட்டை கைது செய்து திருச்சி கொண்டு வந்து விசாரித்து உள்ளனர். அப்போது அவருக்கு உடந்தையாக சர்ச் செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ஸ்டீபன்சன், புரோக்கர் நெல்லை சாமுவேல் ஆகிய மூன்று பெரும் இருந்ததாக கூறப்பட்டதை அடுத்த அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.