கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு விதிமுறைகளுடன் அரசு பேருந்துகள் இயங்கத் தொடங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக கடந்த ஐந்து மாதகாலம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. பரவலைத் தடுக்கும் விதமாக கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே தமிழகம் முழுவதும் பஸ்கள் இயங்கவில்லை.
ஊரடங்கு தொடர்ந்து 6-வது மாதமாக தொடர்கிறது. கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்ட தளர்வில் மண்டலங்களுக்கு இடையே பேருந்துகள் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு குறைந்த அளவுபேருந்துகள் இயக்கப்பட்டது. கொரோனா வைரஸ் கூடுதலாக மக்களை பாதிப்பதால் பஸ் இயக்கம் மீண்டும் தடை செய்யப்பட்டது. தற்போது செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி மாவட்டத்திற்குள்மட்டும் பஸ்கள் இயங்கி வருகிறது.

இந்நிலையில் 7ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதித்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு அரசு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் பஸ்கள் இயங்க துவங்கியது.
பேருந்துகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. சமூக இடைவெளியுடன் குறைந்த அளவு பயணிகள் மட்டுமே பயணம் செய்யக்கூடிய வகையில் வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 5 மாதங்களுக்கு பிறகு வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்கள் ஆர்வமாக பஸ்களில் பயணிக்கத் தொடங்கினர். பயணிகளின் கூட்டத்தை பொருத்து இன்னும் ஓரிரு நாட்களில் கூடுதலான பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்தன.






0 Comments