மதுரையில் பாஜக கட்சி நிகழ்ச்சியில் இளைஞரணி தலைவருக்கு துப்பாக்கி பரிசாக கொடுக்கப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மதுரை புறநகர் மாவட்டத்தில் புதியதாக இளைஞரணி மாவட்ட மண்டல நிர்வாகிகள் கூட்டம் மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் இளைஞர் அணி தலைவர் வினோத் செல்வம் கலந்து கொண்டார். அவருக்கு நிகழ்ச்சியில் ஏர்கன் துப்பாக்கி பரிசாக வழங்கப்பட்ட புகைப்படம் சமூக வலை தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவரை வரவேற்று மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் ஹிந்தியில் போஸ்டர் ஒட்டப்பட்டதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.






0 Comments