கேரள மாநிலம் பத்தனம்திட்ட மாவட்டத்தில் உள்ள ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம், இரண்டு பேரும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர், வண்டியை ஆள் நாடமாட்டம் இல்லாத இடத்திற்கு எடுத்து சென்றுள்ளார். பின்னர், ஆம்புலன்சில் இருந்த அந்த இளம்பெண், வண்டியிலேயே வைத்து சீரழித்துள்ளார்.
இதுமட்டுமின்றி, இந்த விஷயம் பற்றி வெளியே சொன்னால், கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண், தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






0 Comments