'இந்தி தெரியாது போடா!' என்ற தலைப்பிலான ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி முதலிடம்!
பிரபல இசையமைப் பாளர் யுவன்ஷங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் படத்துடன் 'I am a தமிழ் பேசும் indian' என்ற வாசகம் அமைந்துள்ள டிசர்ட் அணிந்தபடியும் ஒளிப்படத்தை பதிவிட்டிருந்தார்.

அவருடன் அருகில் இருக்கும் நடிகர் மெட்ரோ திரைப்பட கதாநாயகன் ஷிரிஷ், 'இந்தி தெரியாது ஜீஷீபீணீ!' என்ற டிசர்ட்டை அணிந்தி ருக்கிறார். யுவன்ஷங்கர் ராஜா டுவிட் தற் போது இணையதளத்தில் பெரும் வைரலாகியுள்ளது. இதனைபோன்று, இந்தித் திணிப்புக்கு எதிராக பல சினிமா பிரபலங்களும், 'I am a தமிழ் பேசும் indian', 'இந்தி தெரியாது poda' என்ற வாசகம் அமைந்துள்ள டிசர்ட் அணிந்த ஒளிப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

அண்மையில் திமுக மக்களவைக் குழுத் துணைத் தலைவர் கனிமொழி இந்தி தெரியாததால் நீங்கள் இந்தி யரா? என்று கேட்டு, விமான நிலையத் தில் அவமதிக்கப்பட்டதாக தெரிவித் திருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆயுஷ் அமைச்சகம் நடத்திய மருத்துவர்கள் கருத்தரங்கில் இந்தி தெரியாதவர்கள் வெளியே செல்ல லாம் என்று ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளரே கூறும் நிலை இருந்து வருகிறது. இதுபோன்று மத்தியில் ஆளும் பாஜக அரசு தொடர்ச்சியாக இந்தி மொழித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்புகளில் தீவிரம் காட்டிவருகின்ற இந்த கால கட்டத்தில் இளைய தலை முறையினர் சமூக ஊடகங்கள்வயி லாக கொதித் தெழுந்துள்ளனர். #இந்தி தெரியாது போடா! என்ற ஹேஷ்டேக் டுவிட்ட ரில் ட்ரெண்டிங் ஆகி தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது.

இந்திய அளவில் டுவிட்டர் டிரெண் டிங்கில் 4ஆவது இடத்தில் உள்ளது. இதனைபோன்று #Tamil என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.